திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் G.S.அனிதா, (தலைமையிடம்) வடகிழக்கு பருவமழை சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நியமிக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினரையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் (10.10.2024)ஆம் தேதி ஆய்வு செய்தார்.
மேலும் அவசர அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்ய வசதியாக 15 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவில் நீச்சல், மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் வாய்ந்த, காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு கூறி, பேரிடர் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார். உடன் மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர், செந்தாமரை கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்