தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, நெய்வேலி தென்பாதி கிராமத்திலிருந்து சாதி சம்பந்தமான புகார்கள் அதிக அளவில் வருவதை தடுப்பது குறித்து ஒரத்தநாடு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் காவல் துறை சார்பாக அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு.
அந்த ஊர் பொது மக்கள் மனதில் எந்த ஒரு பிரிவினையும் இன்றி பரிசுகளை வழங்க செய்தார். மேலும் மாணவர்களுக்கு கஞ்சா, மது போன்ற போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிவுரை வழங்கி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு 1098 என்ற உதவி எண்ணும் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற உதவி எண் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.