நெல்லை: பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி (33), நெல்லை கோட்டூர் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்ற செல்வம் (28), கொம்பையா (31),சுரண்டையை சேர்ந்த மாரிச்செல்வம் (38) இவர்கள் 4 பேரும் கோட்டூர் பகுதியில் அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இசக்கி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.