திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை காவல்துறையினர் கண்காணிப்பதோ அப்படியே கவனத்திற்கு வந்தாலும் கண்டு கொள்வதோ கிடையாது என்று (22.12.2024) இன்று தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக காவல்துறையால் கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடுகிறது. திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயிலில் கொலை நடந்ததை குறிப்பிட்டு, வெவ்வேறு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டது சம்பந்தமாக திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைத்து சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கண்காணித்து எந்த ஒரு சமுதாயத்தினருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டு 27 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அனைத்து சமூக வலைதளங்களையும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இது போன்று தவறான பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்