தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் துறையினருக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நாம் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாவட்டத்தில் நடக்கும் தங்களுக்கு தெரிந்த எந்த ஒரு குற்ற செயல்களையும் உடனடியாக தனக்கு தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினார். பின்னர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இருவரும் இணைந்து குற்ற சம்பவங்கள் இல்லா தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது.