சிவகங்கை: தினபூமி சீனிவாசன் என்று அனைவராலும் போற்றக்கூடிய அளவில்
பத்திரிக்கை உலகில் என்னை அறிமுகப்படுத்தி தாய் உள்ளத்தோடு வழிநடத்திய தினபூமி அதிபர் கே ஏ எஸ் மணிமாறன் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது போலவே என்னையும் அதிர்ச்சியடைய ச் செய்துவிட்டது. (14.10.2024) மாலை 5 மணி அளவில் தோவாளையில் உள்ள தினபூமி செய்தி ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு உயிரிழந்ததை ஒட்டி துக்கம் விசாரிக்க சென்றார். தினமும் அதிபர் மணிமாறன் மற்றும் அவரது மகன் ரமேஷ். அவரது இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்டு மதுரைக்கு திரும்பிய தினபூமி உரிமையாளர் திரு.மணிமாறன் கார் கண்டைனர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது கூடுதல் சோகம். அவருடைய மகன் ரமேஷ் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த மணிமாறன் ஆத்மா சாந்தியடையவும் படுக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் நலம் பெற வேண்டிய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
பத்திரிகை வரலாற்றில் ஒரே நேரத்தில் நான்கு பதிப்புகளை துவங்கி வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இலவச புத்தகம் பத்திரிக்கையோடு அதன் பிறகு பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளை துவங்கி நடத்தி பத்திரிக்கை உலகின் ஜாம்பவானாக வலம் வந்தவர் மணிமாறன். தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுள் எண்ணற்றவர்கள் தின பூமியில் பணியாற்றியவர்களாக இருக்கக்கூடும். அதிர்ஷ்டம் எனும் நாளிதழை பல்வேறு இந்திய மொழிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் லாட்டரி சீட்டு ரிசல்ட் வெளியிட்டு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் தின பூமி அதிபர் மணிமாறன் கார் விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி உண்மை நிலையே என் போன்றவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி