தேனி: தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமி நிலவு நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க கேரள அதிகாரிகள் மறுப்புதெரிவித்தனர். கேரள வனத்துறை மற்றும் காவல்துறை யினர் முட்டுக்கட்டை இருவரு ம்சேர்ந்து முட்டுக்கட்டை போட்டனர்.
இதனால்தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வரு கின்றனர். தேனி மாவட்ட நிர்வாகம் கண்ணகி கோவில் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும்புகார் தெரிவித்தனர். தேனி மாவட்ட நிர்வாகத்துக்கும் கேரள இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து கோஷம் எழுப்பி வருகின்றன்ர்.