கடலூர் : நெய்வேலி நகர் காவல் நிலைய சரகத்தில் 21 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்தார். மேலும், இவ்வகை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை காவல்துறைக்கு வழங்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
















