இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப் பாராட்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.