தூத்துக்குடி: திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகரம் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர்களில் தகுதியானவர்கள் சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று அவர்களுக்கு திருநெல்வேலி சரகத்தில் வைத்து 9 வார காலம் சார்பு ஆய்வாளருக்கான சட்டப்பயிற்சி, கவாத்து பயிற்சி மற்றும் துப்பாக்கி பயிற்சி ஆகியவை நடைபெற்றது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 11 காவல்துறையினர் மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டு அதில் சார்பு ஆய்வாளர் திரு. வீரபாகு அனைத்து பயிற்சியிலும் முதலிடத்தையும், சட்ட பயிற்சியில் சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் முதலிடத்தையும், துப்பாக்கி பயிற்சியில் சார்பு ஆய்வாளர் திரு. முத்து இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேற்படி சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பயிற்சியில் வெற்றி பெற்ற சார்பு ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (06.01.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்.