தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கிகரித்து 2022ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான “அண்ணா காவல் பதக்கத்தை” வழங்கி கௌரவித்தது. மேற்படி அண்ணா காவல் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர் திருமதி. பத்மாவதி அவர்கள் (27.08.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் சந்திந்து வாழ்த்து பெற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி அண்ணா காவல் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளரை பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்.