திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்து வருபவர் பிரவீன்(30). இவரிடம், அண்மையில் நக்கனேரியைச் சேர்ந்த சத்யாதேவி(37). என்பவர் தன்னை சாார் ஆட்சியர் என்றும் வடக்கன்குளத்தைச் சேர்ந்த சுரேஷ்(37). என்பவர் மண்டல அதிகாரி என்றும் அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர், சத்யாதேவி பிரவீனிடம் கட்டடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாகக் கூறி 17 பவுன் தங்க நகைகளையும், ரூ.8.5 லட்சம் ரொக்கமும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்ததால் பிரவீன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப.விடம் புகார் செய்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலெட்சுமி, உதவி ஆய்வாளர் ஆஷா ஜெபகர், தலைமை காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் விசாரணை செய்து சத்யாதேவியை கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செல்லத்துரை என்பவரை கடந்த அக்டோபர் 22இல் கைது செய்தனர். இந்நிலையில், சுரேஸ் என்பவரை கைது செய்த காவல்துறையினர் மோசடிக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















