திருநெல்வேலி: திருநெல்வேலி, மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வரும் ஓம் பிரகாஷ் (31). என்பவர் (27.11.2023)-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது பங்கு சந்தை பற்றிய பதிவு வந்ததாகவும், அதை கிளிக் செய்து முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற ஆசை வார்த்தை கூறியதன் பேரில் ரூபாய் 9,13,867/- அனுப்பியதாகவும் அதற்கு ரூ3,79,544/- மட்டும் திரும்ப கிடைத்ததாகவும் மீதி பணத்தை கேட்டதற்கு மேலும் பணம் அனுப்பினால் தான் பணம் திரும்ப கிடைக்கும் என்று கூறியதால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து (23-09-2024)-ஆம் தேதி, திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர், சண்முகவடிவு மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்