திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம் நகரை சேர்ந்தவர் ஜெய செந்தில் குமார் (52). அவரது இன்ஸ்டாகிராம் id -ல் Libraa off shore pvt ltd என்ற நிறுவனத்தின் பெயரில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் சிங் என்பவர் பிரசாந்த் எனும் பெயரில் அறிமுகமாகியுள்ளார். இளைஞர்களுக்கு மெக்கானிக் ராஸ்டாபோட் என்ற வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஜெய செந்தில்குமாரிடம் வங்கி மூலமாக மொத்தம் ரூ.35,55,000/-யை பெற்று கொண்டு இந்தோனேஷியா செல்ல போலி விசா மற்றும் போலி டிக்கெட் கொடுத்து ஏமாற்றி விட்டதாக ஜெயசெந்தில்குமார் (13.11.2025) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் (மாவட்ட குற்றப்பிரிவு -I ) துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மேற்பார்வையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், அன்னலெட்சுமி, வழக்கு பதிவு செய்தார்.
இவ்வழக்கில் ஹரியானா மாநிலம் சென்ற மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆஷா ஜெபகர் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர், வெள்ளப்பாண்டி, தலைமை காவலர்கள், முத்துராமலிங்கம் கலையரசன் ஆகியோர் உமேஷ் சிங்கை கைது செய்து அழைத்து வந்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















