திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பழனி, சின்னகலையம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் 4 பேரிடமும் ரூ.27 லட்சம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி.குமரேசன் தலைமையில் சப் – இன்ஸ்பெக்டர்கள் வனிதா, கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து பிரேமலதாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை வீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















