திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானலை சேர்ந்தவர் அர்ச்சனா 1.50 லட்சம் பாண்டீஸ்வரியிடம் ரூ.3 லட்சம், பிரியதர்ஷினியிடம் ரூ.1.30 லட்சம் என மொத்தமாக மூவரிடமும் ரூ.6.80 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கொடைக்கானல் இ.எஸ்.ஐ.,மருத்துவமனை செவிலியர் முத்துலட்சுமி, திண்டுக்கல் இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் செவிலியர் ஆரோக்கிய சாந்திமேரி, சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக அர்ச்சனா கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் ஆரோக்கிய சாந்திமேரி, ரவிச்சந்திரன் இருவரும் ஏற்கனவே இதேபோல் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா