கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தமிழ் நகரில் ராதம்மா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் (23.04.2025) ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற போது அங்கே ஒரு ஆம்னி காரில் வந்த இரண்டு நபர்கள் ராதம்மாவிடம் உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது அதனை பூஜை செய்து எடுத்து தருகிறோம் என்று சொல்லி அன்று இரவு சுமார் 9.00 மணிக்கு ராதம்மாவின் வீட்டிற்கு மேற்படி இரண்டு நபர்களுடன் இரண்டு பெண்கள் உடன் வந்து புதையல் உள்ளது என்று நிரூபிப்பதாக சொல்லி வீட்டின் அருகே ஒரு குழி தோண்டு என்று சொன்னதாகவும் ராதம்மாவின் கணவர் குழி தோண்டிய பிறகு இருவரையும் சிறிது நேரம் வெளியே இருக்க சொன்னதாகவும் பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த குழியில் பானை ஒன்று இருந்ததாகவும் அதில் இரண்டு தங்க காசுகள் இருந்ததை பார்த்து நம்பியதாகவும் மேலும் மேற்படி நபர்கள் இந்த புதையலை இப்போது எடுக்க முடியாது இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டதாகவும் இதனை நம்பிய ராதம்மா தவணை முறையில் அவ்வப்போது பணம் கொடுத்து தற்போது வரை ஏழு லட்சம் பணம் கொடுத்ததாகவும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அனைவரும் ஓசூரில் உள்ள லாட்ஜில் தங்கியதாகவும் பிறகு ராதம்மாவிடம் ஒரு சூட்கேஸ் கொண்டு வந்து அதில் பணம் ரூபாய் ஒன்றரை கோடி இருப்பதாகவும் இந்த பணத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டு புதையலில் உள்ள தங்க காசுகள் நாங்களே எடுத்துக் கொள்கிறோம்.
என்றும் ராதம்மா மீண்டும் லார்ஜிற்கு சென்ற போது பணம் கேட்டதாகவும் ராதம்மாவிற்கு சந்தேகம் அடைந்து சூட்கேஸை உடைத்து திறந்து பார்த்தபோது அதில் வெறும் வெள்ளை காகித கட்டுகள் மட்டுமே இருந்ததாகவும் ஏமாற்றம் அடைந்தது தெரிந்து ராதம்மா (04.05.2025) ஆம் தேதி நல்லூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வழக்கின் குற்றவாளிகளான பத்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹1,56,000 லட்ச ரூபாய் பறிமுதல் செய்து குற்றவாளிகளை காவல் நிலையம் கொண்டு வந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் இவ்வாறு மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்