திருநெல்வேலி: தாழையூத்து, சங்கர் நகரை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சியாம் சுந்தர் (52). என்பவரிடம் அதிக லாபம் தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய தாழையூத்து, TNHB காலனியை சேர்ந்த மணிகண்டபிரபு(28). மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கொடுத்த பண மோசடி புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன். ரகு (பொறுப்பு) அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ப.முத்து அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மேற்படி மணிகண்டபிரபு (28). அவருடைய மனைவி சுவேதா(21). மணிகண்ட பிரபுவின் அண்ணன் மாரிகணேஷ்(33). அவருடைய மனைவி கனகா(27). மற்றும் மணிகண்ட பிரபுவின் தாயார் செல்வி(54) ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. முத்து அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு. ஜான் போஸ்கோ, திரு. முத்துராமலிங்கம், திரு ஆனந்தராஜ், திருமதி. தமிழ்செல்வி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர்கள் செல்வி. நந்தினி, திருமதி. ஹெப்சிபா ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகள் அனைவரையும் ஈரோட்டில் வைத்து (02.08.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வழக்கில் பணமோசடி செய்து ஏமாற்றி வந்த குற்றவாளிகளை சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.