திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து நாளை 30.06.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுப்பிரமணி அவர்கள், தாண்டிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அன்பழகன் அவர்கள், குஜிலியம்பாறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பொன்ராஜ் அவர்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சலீம் பாதுஷா அவர்கள், நிலக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா அவர்கள், பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள், பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள், திண்டுக்கல் ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள், மற்றும் எரியோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தூய்மை பணியாளர் திரு.முருகன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் இன்று நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.