திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.மகேந்திரன் அவர்கள், வத்தலகுண்டு போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.நாகேஸ்வரன் அவர்கள், நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பூபதி அவர்கள், இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.வெங்கடாஜலபதி அவர்கள், கீரனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள், திண்டுக்கல் சரகம் (காவல்துறை) தலைமை நிருபர் திரு.ராஜகோபால் அவர்கள், கொடைக்கானல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கதிர்வேல் அவர்கள், கன்னிவாடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா அவர்கள், பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.காசிராஜன் அவர்கள், தாடிக்கொம்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குருசாமி அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் திருமதி.சம்பூரணம் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோஜி அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.