திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.05.2023)-ம் தேதி அன்று பணி ஓய்வு பெற உள்ள பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பரமசிவம், பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன், நகர் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.கணேசமூர்த்தி, மற்றும் திரு.திரவியம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியன், திண்டுக்கல் நகர் வடக்கு போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மணிவேல், செம்பட்டி காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு.நாராயணன், மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணிபுரியும் திருமதி.சகாய மேரி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா