திருநெல்வேலி: கடந்த 19.08.2019 அன்று பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுடலைமுத்து என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் திரு. ஆறுமுகம் அவர்கள் 29.11.2019 அன்று விபத்தில் காலமானார்.
மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (30.09.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுடலைமுத்து என்பவரது குடும்பத்திற்கும், இரண்டாம் நிலை காவலர் திரு. ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.