திருநெல்வேலி: தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல்துறை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் 318 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த 11 வாரிசுதாரர்களுக்கு பணி நியமண ஆணையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன்,IPS, அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.மதிவாணன் அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.