திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. ஆவடி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி வான் தந்தி மூலம் காவல் ஆணையரகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி பணிகளை துவக்கி வைத்தார். அதேபோன்று திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பணிகளையும் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர்,பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர், பொன்னேரி காவல் ஆய்வாளர் காளிராஜ், கிரைம் ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு