திருநெல்வேலி : திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர், முத்துகணேஷ் தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று விசாரணை செய்ததில், டோக்கன் முறையில் பணம் வைத்து பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் ரூ.4,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெருமாள்புரத்தைச் சேர்ந்த நடேசன் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். மேலும், சூதாட்டச் செயல்களில் ஈடுபடுவோர் மீது மாநகர காவல் ஆணையர் ஆலோசனைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















