திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பாண்டி(44). மருதமுத்து(51). நாகராஜ்(26). சத்யராஜ்(30). காளிமுத்து(25). என்பது தெரிய வந்ததை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா