குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில்கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் நேற்று சபையர் குளம் பகுதியில் ரோந்து சென்றார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இடலாக்குடி பகுதியை சேர்ந்த சாமி, பாஸ்கர் , உதயகுமார், மகேஷ், மற்றும் ஏசுராஜன் ஆகிய அனைவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சூதாடிய கார்டு மற்றும் சூதாடிய பணத்தை பறிமுதல் செய்தார்.