திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சங்கிலி கரடு மலைப்பகுதியில் சூதாடுவதாக வேடசந்தூர் DSP. பவித்ரா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட போது மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய தீத்தாகீழவனூர் பகுதியைச் சேர்ந்த ராசு மற்றும் கணேசன் வேங்கனூரை சேர்ந்த மணி உள்ளிட்ட 3 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து பைக் மற்றும் பணம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















