திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, சுந்தர் நகரை சேர்ந்த பென்சன் ராஜா என்ற நம்பிராஜன் (42). என்பவரிடம் திசையன்விளை, குமாரபுரம், வாழை தோட்டத்தை சேர்ந்த குரூஸ் அலெக்சாண்டர் (43). மற்றும் தூத்துக்குடி மாவட்டம், பழங்குளம், ஆனந்தபுரத்தை சேர்ந்த மகாராஜன் என்ற மகேஷ் (40). ஆகிய இருவரும் 5 கோடி கடன் குறைந்த வட்டியில் வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் ரூபாய் 24 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். மேற்படி இரு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பென்சன் ராஜா என்ற நம்பிராஜன் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா (பொறுப்பு) அவர்கள் மேற்பார்வையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ப.முத்து அவர்கள் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள், தலைமை காவலர்கள் திரு. ஜான்போஸ்கோ, திரு. முத்துராமலிங்கம் ஆகியோர் குற்றவாளிகளை கைது செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளான குரூஸ் அலெக்சாண்டர் மற்றும் மகாராஜன் என்ற மகேஷ் ஆகிய இருவருரையும் (29.02.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு மோசடி செய்து ஏமாற்றிய குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.