சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டரமாணிக்கத்தில் கடந்த (29.10.24)ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிதம்பரம் என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை திருடியது தொடர்பாக திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப அவர்களது உத்தரவின் பேரில், திருப்பத்தூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர், செல்வக்குமார், த.கா.ப , .அவர்களது மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் ராஜவேல், அவர்களது தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், தேனி மாவட்டம், அல்லிநகரம், பாண்டியன் நகரைச்சேர்ந்த மாணிக்கம்பிள்ளை என்பவரது மகன் சோனிராஜா (58) மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, செக்கானூரணி, மாவிலம்பட்டியைச்சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் அழகர்சாமி (35) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 43 சவரன் தங்க நகைகள், 21 கிலோ வெள்ளி நகைகள், ரூ.63,000/- பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. மேலும், மேற்கண்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி