திருநெல்வேலி : திருநெல்வேலி உடையார்பட்டியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் மாரியப்பன்(46). என்பவர் (23.03.2025) அன்று தனது மனைவியுடன் உடையார்பட்டி பகுதியில் நடைபயிற்சியில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து உடையார்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்த சாமிநாதனை (38). கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
அதே போல், ரஹ்மான் பேட்டையைச் சேர்ந்த சம்சுதீன் மகன்இஸ்மாயில்(42). திருப்பணிகரிசல்குளம் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது நாராயணசாமி கோயில் வடக்கு தெருவைச் சேர்ந்த விஜயன் மகன் சதீஸ் (25). என்பவர் இஸ்மாயிலிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்