திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர் தண்டபாணியை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி ரூ.1000 பணம் பறிக்க முயன்றதாக தண்டபாணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி சார்பு ஆய்வாளர்.ராஜகோபால் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத்குமாரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா