திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பாலாஜி என்பவர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிபாண்டி(22). தென்னம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார்(27). ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மணிபாண்டி, சதீஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா