கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த (03.05.2025) ஆம் தேதி காலை 06.15 மணியளவில் பத்மா என்பவர் தன் கணவரின் இருதய நோய் சிகிச்சைக்காக பெங்களூர் செல்ல பஸ் ஏறிய சிறிது நேரத்தில் தனது பையில் இருந்த கழுத்து செயின், ஒரு ஜோடி தோடு, மற்றும் பணம் ₹27000/ திருடி போயுள்ளதை கண்டு (06.05.2025) ஆம் தேதி மத்தூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து திருடிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒருபவுன் நகையை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.