திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார், காந்திநகரில் வசித்து வருபவர் சஞ்சய் கனி (45). இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றிருந்தார். அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. சஞ்சய்கனி வந்த
பிறகுதான் திருடு போன பொருட்கள் விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 3வது நாளாக நேற்றும் தொடர்ந்த திருட்டால் வேடசந்துார் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா