குமரி : நாகர்கோவில் களியங்காடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சம்பவத்தன்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி யில் பதிவாக காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்திய சோபன் வெட்டூர்ணிமடம் பகுதியில் ரோந்து சென்றபோது,
சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, ஈரோடு பாசூர் ஏ.டி. காலனியை சேர்ந்த கேசவராஜ் 44 என்பதும் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் உண்டியை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து கேசவராஜை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்திய சோபன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.