திண்டுக்கல் : திண்டுக்கல், கோவிந்தாபுரம், நாயக்கர் புது தெரு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் வீட்டில் கடந்த 14-ம் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணம் ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் டி,வி காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பிலால்(30). நாகேந்திரன்(24). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா