திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர் அவரிடமிருந்து கைப்பேசியையும், ரூ.1,500 பணத்தையும் பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் சேர்மதுரை அளித்த புகாரின் படி காவல் உதவி ஆய்வாளர், சத்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட அனவரதநல்லூரைச் சேர்ந்த நம்பி சுபாஷ்(25). செய்துங்கநல்லூரைச் சேர்ந்த செல்வம்(29). ஆகிய இருவரையும் கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்