மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இயங்கிவரும் பாராமவுண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த 12.08.2023-ம் தேதி அமைச்சர் அவர்களின் உதவியாளர் பேசுவது போன்றும் அமைச்சர் அவர்கள் பேசுவது போன்றும் செல்போனில் பேசி மாநாடு நடத்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியதாக மேற்படி நிறுவனத்தின் ஐடி பிரிவு தலைமை பொறுப்பாளர் திரு.டெலியூஸ் பெர்னான்டஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த M. முகம்மது ரபீக் என்பவர் ஈடுபட்டது கண்டறியபட்டு சென்னையில் பதுங்கியிருந்த மேற்படி எதிரியை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்