திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், மதுரை ரோடு தங்கப்பழம் ஹோட்டல் அருகே (08.11.2024)ஆம் தேதி தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை(34). என்பவர் சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்த தச்சநல்லூர் சத்திரம்புதுகுளத்தை சேர்ந்த இசக்கி மகன் சுடலைகுமார்(20). மற்றும் முருகன் மகன் மாரியப்பன்(38) ஆகியோர் குன்னிமலையை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டு தர மறுத்த காரணத்தினால் கத்தியை காட்டி அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்