மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (28.06.2024)ம் தேதி மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் Online Part Time Job வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி ரூபாய்.52,66,417/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி, குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.76,52,625/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2/2 மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக கேரளா காயாம்குளத்தை சேர்ந்த நாசதிமகன் அன்வர்சா என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கை தொடர்ந்து புலன்விசாரணை செய்ததில் கர்நாடகா மாநிலம், மைசூர், உதயகிரியைச் சேர்ந்த முனவர்கான் மகன் சல்மான்கான், ஷானுல்லா மகன் ஜூபர்கான் மற்றும் மைசூர் N.R.மொகல்லாவை சேர்ந்த ராஜேந்திரா மகன் கிரியேஷ் ஆகியோர் இந்த மோசடியில்
ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகளை காவல்ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கர்நாடாகா மாநிலம் மைசூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குற்றவாளிகள் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி வங்கி கணக்குகள் பெற்று சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உதவியாக இருந்ததும், அதற்கு ஆயிரக்கணக்கில் கமிஷன் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 6T6OT மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்