திருநெல்வேலி: விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரத்தைசேர்ந்த கணேசன் 42, காரியாகுளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 55, சுடலைமணி 54, தங்கராஜ் 58, காத்தநடப்பு பகுதியை சேர்ந்த பால்வர்ணம் 55.பரப்பாடியை சேர்ந்த ஜெயசிங் 55. ஆகியோரை உதவி ஆய்வாளர் திரு. ஜார்ஜ் பிரேம் லால் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகளும், ரூபாய் 6080 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்