சென்னை : சென்னை, இராயப்பேட்டை, வெஸ்ட் காட் சாலையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில், வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பர பலகையை பார்த்து கடந்த (21.04.2022 ), அன்று செங்கல்பட்டு மாவட்டம், அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன், என்பவர் பெட்ரோல் போடும் வேலையில் சேர்ந்து, அன்று ஒரு நாள் மாலை வரை வேலை செய்து விட்டு வசூல் செய்த பணம் ரூ.14,000/- திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சிவகுமார் (44), என்பவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
அண்ணாசாலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மாரியப்பன் (வ/33) செங்கல்பட்டு மாவட்டம் என்பவரை(02.05.2022), அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.