திண்டுக்கல் : திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பகுதியில் தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இப்பல் பொருள் அங்காடி சில பணியாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று இரவு காய்கறி வாங்குவதற்காக ரூ.65 ஆயிரத்து 500 வை ஊழியர் அறையில் வைத்திருந்தார். நேற்று காலை எழுந்து ஊழியர்கள் பார்த்த போது பணத்தை காணவில்லை. இச்சம்பவம் குறித்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் தெரியவந்தது. இது குறித்து வடக்கு காவல் நிலையத்தில் அங்கன்வாடி மேலாளர்.பாலசுப்ரமணி புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நகர் புற துணை கண்காணிப்பாளன். சிபின் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர். சரத்குமார், குற்றப்பிரிவு காவல்துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள். வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், காவலர் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் வாலிபர்கள் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா