கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஸ்ருதிலயா என்பவர் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் அசோசியேட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் வைத்து நடத்தி வருவதாகவும் (27.11.2023) ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்தபோது தீபா என்ற நபர் அலுவலகத்திற்கு வந்து நீ PAN Card Apply செய்ய வந்தவரை ஏமாற்றியதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வந்துள்ளேன் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் பணம் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டி கையில் இருந்த செல்போனையும் பிடுங்கிக் கொண்டதால் பணம் கொடுத்ததாகவும் மேலும் தன்னிடமிருந்து ID கார்டை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டு மறுநாள் போன் செய்து ID கார்டு வேண்டுமென்றால் #20,000/- ரூபாய் பணத்தை கொடு என்று மிரட்டியதாகவும் ஸ்ருதிலயா Income Tax அலுவலகத்தில் தீபா என்பவர் பணிபுரிகிறார என விசாரணை செய்தபோது அவ்வாறு யாருமில்லை என தெரிந்தவுடன் ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து பணத்தை ஏமாற்றிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்