ராமநாதபுரம்: ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 180 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பட்டு வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகை போகலூர் ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை பகுதி விவசாயி ராஜாக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், கமுதி ஊராட்சி ஒன்றியம்,
நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வளர்மதிக்கு இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், கமுதி ஊராட்சி ஒன்றியம், டி.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலமேகத்திற்கு மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சங்கர் லால் குமாவத் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.