திண்டுக்கல் : திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி தேதி 64 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரையை சேர்ந்த அழகுபாண்டி (28), பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (28) உட்பட 8 பேரை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேர்களில் முதற்கட்டமாக அழகுபாண்டி மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், பரிந்துரையின்படி கலெக்டர் விசாகன், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீசார் அழகுபாண்டி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.