திருப்பூர்: திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர் முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இருவர் தங்களது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கத்தி,பட்டா கத்தியுடன் பாட்டு பாடி பொது மக்களை மிரட்டும் தோனியில் பதிவிட்டுள்ளனர்.
இதை அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையப்போலிசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இரண்டு பேரையும் பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழை சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். நல்ல அறிவுரைகளை கற்று தரவேண்டும்.அப்படி நல் வழி படுத்தும்போது குழந்தைகளின் எதிர்காலம் சீராக இருக்கும் என்றனர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்