விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், இந்த மாதத்தில் மட்டும் 5-வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தால் எட்டு பேர் பலியாயினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி