விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடை பெற்றது. தமிழ் பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அல்லி முத்து நாடார் நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் பேருந்து நிலையம், மற்றும் பொது நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
குடிசை பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து திறந்த வெளிப் பகுதியில் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் , எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் உடனையாக தண்ணீர் ஊற்றி அனைக்க வேண்டும். பட்டாசுகளை டின் பாட்டில்களில் வைத்து வெடிக்க கூடாது, பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான உடைகள் அணிய வேண்டும் வெடிக்காத பட்டாசுகளை உடனடியாக அகற்றி விட வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து கண்காணிக் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங் கள் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையில் வீரர்கள் பிரச்சாரம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி